போலீஸ் செய்திகள்...
கடையில் திருட முயன்றவர் கைது தேனி : தேனி பாரஸ்ட் ரோடு சொர்ண காளியம்மன் கோயில் தெரு பிரேமா 48. புது பஸ் ஸ்டாண்ட் அருகே சிவாஜிநகர் சந்திப்பில் இட்லிக் கடை வைத்துள்ளார். கடையில் இவர் வைத்திருந்த கட்டைப்பையில் இருந்து பணம், அலைபேசியை பங்களாமேடு பெரியமாயன் தெரு பிரபாகரன் 25, திருட முயற்சித்தார். இதைப் பார்த்த பிரேமா கூச்சலிட்டார். அங்கிருந்து தப்பி ஓட முயன்ற போது, தடுமாறி கீழே விழுந்து பிரபாகரன் காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் பிடித்து தேனி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.கஞ்சா விற்ற இருவர் கைதுகடமலைக்குண்டு: வருஷநாடு- முறுக்கோடை ரோட்டில் மொட்டப்பாறை அருகே வைகை ஆற்றங்கரையில் சந்தேகப்படும்படி இருவர் இருந்தனர். அவர்களை பிடித்து கடமலைக்குண்டு போலீசார் விசாரித்தனர். அதில் தர்மராஜபுரத்தை சேர்ந்த சிலம்பரசன் 35, சிங்கராஜபுரத்தை சேர்ந்த தோகை 36, என்பது தெரிய வந்தது. 38 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. குமுளியில் இருந்து வாங்கி வந்து விற்பனைக்கு வைத்திருந்ததாக தெரிவித்தனர். கைப்பற்றிய போலீசார் இருவரையும் கைது செய்தனர்.விபத்தில் ஒருவர் பலிதேவதானபட்டி: திண்டுக்கல் பழைய வத்தலக்குண்டு செல்வம் 47. இவரது அண்ணன் நாகராஜன் மகன் கலையரசன் 33. இருவரும் பெரியகுளம் ஒன்றியம் சிந்துவம்பட்டியில் உறவினர் திருப்பதி வீட்டு விசேஷத்திற்கு வந்து விட்டு, டூவீலரில் ஊர் திரும்பினர். டூவீலரை கலையரசன் ஓட்டினார். சில்வார்பட்டி ஒத்தவீடு அருகே செல்லும் போது, நாய் குறுக்கே சென்றது. இருவரும் காயமடைந்தனர். பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வம் இறந்தார். மருத்துவமனையில் கலையரசன் சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.சிறுவன் துாக்கிட்டு தற்கொலைஆண்டிபட்டி: பிச்சம்பட்டி மணிகண்டன் 48. இவருக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மகன் மகேஸ்வரன் 14, கன்னியப்பபிள்ளைபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் மணிகண்டன், தனது மகனை, 'வீட்டில் ஏதாவது வேலை செய்யலாமே' எனக்கூறி கண்டித்தார். வீட்டில் படுக்கையறைக்கு சென்று, கதவை பூட்டி உள்ளார். நீண்ட நேரம் கதவு திறக்காததால் சந்தேகப்பட்டு கதவை உடைத்து பார்த்த போது வீட்டில் சேலையால் துாக்கிட்டு உள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை இறக்கி, தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்ற நிலையில் இறந்தார். ராஜதானி போலீசார் விசாரிக்கின்றனர்.டூவீலரில் கஞ்சா விற்ற இருவர் கைதுபெரியகுளம்: தென்கரை கிருஷ்ணன் கோயில் தெரு பாலாஜி 20. இவரது நண்பர்கள் முத்துராஜா தெரு ஆகாஷ் 24. பதினெட்டு வயது சிறுவன் ஆகிய மூவரும் தென்கரை தனியார் பள்ளி அருகே 70 கிராம் கஞ்சாவை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். ரோந்து சென்ற தென்கரை போலீசார் பாலாஜி, 18 வயது சிறுவனை கைது செய்தனர். தலைமறைவான ஆகாஷை தேடி வருகின்றனர்.