உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் செய்திகள்....தேனி

போலீஸ் செய்திகள்....தேனி

முதாட்டி சடலம்தேனி: வீரபாண்டி முல்லையாற்று கரையில் ஈமசடங்குள் செய்யும் பகுதிக்கு அருகே சுமார் 65 வயது மதிக்கதக்க முதாட்டி உடல் கிடந்தது. தகவல் அறிந்து வீ.ஏ.ஓ., அன்னபூரணி புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர். உடலை தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பெண் மாயம்தேனி: சிவராம் நகர் ரபினாபானு. இவரது மகள் அனீஸ் பாத்திமா 19, தேனி எடமால் தெருவில் உள்ள கவரிங்நகை கடையில் வேலைபார்த்தார். வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. ரபினாபானு புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.விபத்தில் ஒருவர் காயம்தேனி: போடி திருமலாபுரம் வழக்கறிஞர் பாலமுருகன். இவரும் போடி கருப்பசுவாமி கோயில் தெரு முருகனும் ஒரே டூவீலரில் போடி நோக்கி சென்றனர். இவர்கள் பின்னால் வந்த மற்றொரு டூவீலர் பாலமுருகன் டூவீலரில் மோதியது. இந்த விபத்தில் முருகன் காயமடைந்து தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். விபத்தை ஏற்படுத்திய டூவீலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாலமுருகன் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.டூவீலர் திருட்டுதேனி: கோடங்கிபட்டி காளியம்மன் கோயில்தெரு புருஷோத்தமன். பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் மில்லில் பணிபுரிகிறார். இவரது டூவீலரை வீட்டு முன் நிறுத்தி இருந்தார். காலையில் பார்க்கும் போது டூவீலர் திருடு போயிருந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.டூவீலர் மோதி முதியவர் பலிதேனி: கோடாங்கிபட்டி திருச்செந்துார் சுப்புராஜ். அப்பகுதியில் ரோட்டை கடந்த போது அடையாளம் தெரியாத டூவீலர் மோதியது. விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை