உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

பார் உரிமையாளர் மீது வழக்கு தேனி: அரசு மதுக்கடைகள், பார்கள் இரவு 10:00 மணிக்கு மூட வேண்டும். தேனி சுப்பன் செட்டி தெருவில் போலீசார் நேற்று முன்தினம் இரவு 10:38 மணியளவில் ரோந்து சென்றனர். அங்கு மது பார் இயக்கத்தில் இருந்தது. சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட மதுபார் உரிமையாளர் ராகவன் காலனி முருகன் 45, மீது தேனி போலீசார் வழக்கு பதிந்தனர். பெற்றோரை தாக்கிய மகன் மீது வழக்கு தேனி: பழனிசெட்டிபட்டி சஞ்சை காந்தி 3வது தெரு சின்னதம்பி 60. பெட்டிக் கடை வைத்துள்ளார். இவரது மனைவி ஆறுமுகம் 58. இவர்களது மூத்த மகன் முருகேசன் 35. வீட்டில் இருந்த பெற்றோரிடம் தனது மனைவியை எனக்கு பிடிக்கவில்லை. வேறு பெண் பார்த்து திருமணம் செய்து வையுங்கள் எனக்கூறி பெற்றோரை கைகளாலும், காலணியாலும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். காயமடைந்த பெற்றோர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். ஆறுமுகம் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர். முதிய தம்பதியை தாக்கிய நால்வர் மீது வழக்கு தேனி: வீரபாண்டி அருகே உள்ள லட்சுமிபுரம் அகிலாண்டேஷ்வரி - விஸ்வநாதன் திருமணத்திற்கு அதே பகுதியை சேர்ந்த சிவராமகிருஷ்ணன், அவரது உறவினர் சஞ்சை உதவினர். இதனால் கோபம் அடைந்த அகிலோண்டேஷ்வரியின் உறவினர்கள் செந்தில்குமார், அழகுமீனா, செல்வம், செல்வராணி ஆகியோர் சிவராமகிருஷ்ணனின் பெற்றோர் கோடீஸ்வரன் 75, தெய்வம் ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்தவர்கள் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். கோடீஸ்வரன் புகாரில் வீரபாண்டி போலீசார் நால்வர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். வாலிபர் தற்கொலை தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி புல்லக்காபட்டி பெருமாள் கோயில் தெரு அழகர் 28. இவரது மனைவி ஸ்ரீதேவி 28. இருவரும் 4 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அழகர் மது பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் ஸ்ரீதேவி கோபித்துக் கொண்டு, பெற்றோர் வீட்டுக்கு சென்றார். இனிமேல் மது குடிக்க மாட்டேன் என அழகர், ஸ்ரீதேவியிடம் உறுதி அளித்தார். இதனால் இருவரும் குடும்பம் நடத்தி வந்த நிலையில், அழகர் மீண்டும் குடிக்கவே ஸ்ரீதேவி மீண்டும் கோபித்துக் கொண்டு சென்றார். இதனால் அழகர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி