உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் செய்திகள் பெண்ணுக்கு கொலை மிரட்டல்

போலீஸ் செய்திகள் பெண்ணுக்கு கொலை மிரட்டல்

தேனி: உப்புக்கோட்டை சுருளிமணி. இவர் பேரையூரில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவரது மனைவி மதனசெல்லமணி 45. இருவரிடமும் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ், அவரது தந்தை முருகன் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தனர். இந்நிலையில் ஆக.,8 ல் சுருளிமணி வீட்டிற்குள் சென்ற விக்னேஷ், அவரது தந்தை இருவரும் மதனசெல்லமணியை தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தனர். மதனசெல்லமணி எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வீரபாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். மாணவர் மாயம் தேனி: பழைய போஸ்ட் ஆபிஸ் ஓடைத்தெரு நல்லபெருமாள் 53. இவரது மகன் நவீன்குமார் 17. பத்தாம் வகுப்பு படித்து வீட்டில் இருந்தார். இவர் அக்.,5ல் வெளியில் செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. நல்லபெருமாள் புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர். ஆட்டோவில் இருந்து விழுந்தவர் காயம் தேனி: பூதிப்புரம் நாகராஜ் 51, கூலித்தொழிலாளி. இவர் தேனிக்கு ஷேர் ஆட்டோவில் சென்றார். ஆட்டோவை கம்பம் புதுப்பட்டி இரட்டைபுளித்தெரு மணிவண்ணன் ஓட்டினார். அதிவேகத்தில் சென்ற ஆட்டோ ஆதிபட்டி அருகே வேகத்தடையில் ஏறி இறங்கியது. அப்போது ஆட்டோவில் இருந்த நாகராஜ் கீழே விழுந்து காயமடைந்தார். அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அவரது புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர். பணத்தை திருப்பி கேட்டவர் மீது தாக்குதல் தேனி: தப்புக்குண்டு பட்டாளம்மன் கோவில்தெரு பழனிமுருகன் 38. இவர் அதே பகுதியை சேர்ந்த ஒன்னப்பகவுண்டர் என்பவரிடம் ஆடு வாங்கி தர கூறி ரூ. 5 ஆயிரம் வழங்கினார். ஆட்டுக்குட்டி வாங்கி தராததால் பணத்தை பழனிமுருகன் திருப்பி கேட்டார். ஒப்பனகவுண்டர் பழனிமுருகனின் கை விரல்களை கடித்து, கல்லால் தாக்கினார். காயமடைந்த பழனிமுருகன் அரசு மருத்துவக்கல்லுாரியில் சேர்க்கப்பட்டார். மனைவி சகுந்தலா புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி