போலீஸ் செய்திகள்...
கஞ்சா பதுக்கிய மூவர் கைது தேனி: போடி நகர் எஸ்.ஐ., குருகவுதம், விஜயராமன் தலைமையிலான போலீசார் இரட்டை வாய்க்கால் பாலம் அருகே ரோந்து சென்றனர். அங்கு 6 கிராம் கஞ்சா வைத்திருந்த கே.புதுப்பட்டி பேச்சியம்மன்கோயில் தெரு ரஞ்ஜித்குமார் 43, டி.வி.கே.கே., நகர் முத்துராஜ் 28, 5 கிராம்கஞ்சா பதுக்கி வைத்திருந்தனர். கம்பம் வடக்கு போலீசார் கோம்பை ரோட்டில் ரோந்து சென்றபோது மாயாண்டி 65, என்பவர் 25 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தார். மூவரும் கைது செய்து கஞ்சா கைப்பற்றப்பட்டது. டூவீலர் திருட்டு தேனி: உத்தமபாளையம் சிங்காரத்தோப்பு தெரு குமரேசன் 54. இவர் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள தனது டூவீலரை அக்.12ல் வீட்டின் முன் நிறுத்தினார். பின் மறுநாள்வீட்டிற்கு வெளியே பார்த்த போது நிறுத்தப்பட்டு இருந்த டூவீலரை காணவில்லை. மர்ம நபர் திருடி சென்று விட்டதாக புகார் அளித்தார். உத்தமபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர். 2 பவுன் நகை திருட்டு தேவதானப்பட்டி: அருகே மஞ்சளாறு அணையைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி 45. இங்குள்ள பொதுப்பணித்துறை குடியிருப்பு பகுதியில் மனைவி அன்னகாமுவுடன் 40. வசித்து வருகிறார். முத்துப்பாண்டி வைகைஅணை நீர்பாசனத்துறை உதவியாளராகவும், இவரது மனைவி அன்னகாமு வைகை அணைப்பகுதியில் பழங்கள் வியாபாரம் செய்து வருகிறார். இருவரும் காலையில் வீட்டிலிருந்து சென்று இரவு திரும்புவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் வீட்டின் பின்கதவை திறந்து, பீரோவிலிருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான இரண்டு பவுன் தங்க செயின், அரை பவுன் மாட்டல், ரூ.25 ஆயிரத்தை திருடி சென்றனர். தேவதானப்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி கம்பம்: வார்டு 19 பாரதியார் நகரில் வசித்தவர் கருப்பசாமி 55, தச்சு தொழிலாளியான இவர், ஏகலூத்து ரோட்டில் உள்ள வீடு ஒன்றின் மாடியில் தகரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டார். தகரம், அதற்கான கம்பிகளை கருப்பசாமி, வீட்டின் மாடிக்கு கொண்டு சென்ற போது, தெருவின் ஓரத்தில் இருந்த மின் ஒயரில் கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து கருப்பசாமி தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் பலியானார். கம்பம் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.