உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பொங்கல் தொகுப்பு அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் கூட்டுறவு, வேளாண் துறையினர் வலியுறுத்தல்

பொங்கல் தொகுப்பு அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் கூட்டுறவு, வேளாண் துறையினர் வலியுறுத்தல்

தேனி: பொங்கல் தொகுப்பு வழங்குவதில் குளறுபடிகள் ஏற்படாமல் தவிர்க்க, அது தொடர்பான அறிவிப்புகளை அரசு விரைந்து வெளியிட வேண்டும் என கூட்டுறவு, வேளாண் துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி, சேலையுடன், பொங்கல் தொகுப்பு, ரொக்க பணம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதனை ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வினியோகம் செய்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் வெல்லம் வழங்கிய போது அவற்றின் தரம் பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்தது. பணம் ரொக்கமாக வழங்கப்படுகிறது.இந்த தொகுப்பு வழங்குவது பற்றி முன் கூட்டியே அறிவித்தால் ஒரு ரேஷன் கடையில் எத்தனை கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்க உள்ளோம் என கணக்கீட்டு கூட்டுறவுத்துறையும், விவசாயிகளிடம் கரும்புகள் கொள்முதல் செய்வதை துரிதப்படுத்துவார்கள். கடந்தாண்டு தாமதமான அறிவிப்பால் தகுதியான கார்டுதார்களுக்கு வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டது. இதனால் பலர் கரும்பு பெற முடியாமல் போனது.இதனால் எந்த வகை ரேஷன்கார்டுகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. பொதுமக்களுக்கு முழு கரும்பு அல்லது குறிப்பிட்ட அடியில் கரும்பு வழங்கப்பட உள்ளதா என்பதை அரசு முன்னரே தெரிவிக்க வேண்டும். என வேளாண், கூட்டுறவுத்துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி