| ADDED : நவ 18, 2025 04:36 AM
போடி: போடி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு விபூதி அலங்காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனின் தரிசனம் பெற்றுச் சென்றனர். பிச்சாங்கரை மலை கைலாய மேலச்சொக்கநாதர் கோயில், போடி பரமசிவன் கோயில், குலாலர் பாளையம் விநாயகர் கோயில், திருமலாபுரம் முத்து மாரியம்மன் கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்ரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. பெரியகுளம்: பாலசுப்பிரமணியர் கோயிலில் ராஜேந்திர சோழீஸ்வரர் (சிவன்), அறம் வளர்த்த நாயகி அம்மன், பாலசுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. ராஜேந்திர சோழீஸ்வரரை வழிபடும் விதமாக 108 சங்காபிஷேகம் பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். காளஹஸ்தீஸ்வரர் ஞானாம்பிகை அம்மன் கோயில், வரசித்தி விநாயகர் கோயிலில் சிவன், வைத்தீஸ்வரன் தையல் நாயகி அம்மன் கோயில்களிலிலும் சங்காபிஷேகம் நடந்தது. மேலும் நேற்று பிரதோஷம் என்பதால் பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கைலாசநாதர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு கைலாசநாதர், பெரியநாயகி அம்மன், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு கவுரவ ஆலோசகர் ஜெயபிரதீப், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் விஜயராணி, உறுப்பினர்கள் செய்திருந்தனர்.