உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சாகுபடியில் சாதனை படைத்த விவசாயிக்கு பாராட்டு

சாகுபடியில் சாதனை படைத்த விவசாயிக்கு பாராட்டு

தேனி: வேளாண் துறை சார்பில் மாநில அளவில் நடந்த நெல் உற்பத்தி திறனுக்கான டாக்டர் நாராயணசாமி நாயுடு விருதினை பெரியகுளம் வடுகபட்டியை சேர்ந்த விவசாயி முருகவேல் வென்றார். இவர் ஒரு எக்டேர் நிலத்தில் 10, 815 கிலோ நெல் மகசூல் செய்தார். சென்னையில் நடந்த குடியரசு தினவிழாவில் முதல்வர் ஸ்டாலினிடம் விருது, பரிசுத்தொகை ரூ.5 லட்சத்தை பெற்றார்.தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில் கலெக்டர் ஷஜீவனா, விவசாயி முருகவேலை பாராட்டினார். டி.ஆர்.ஆர்., ஜெயபாரதி, கலெக்டர் நேர்முக உதவியாளர் வளர்மதி, வேளாண் துறையினர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி