பயிர்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை அவசியம்
தேனி: பருவமழை காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் பயிர்கள் பாதிப்பில் இருந்து பாதுகாக்கலாம் என தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் நிர்மலா அறிவுறுத்தி உள்ளார். அவர் கூறியதாவது: மா, பலா, முந்திரி, எலுமிச்சை பயிர்களில் பட்டுப்போன கிளைகளை அகற்றிட வேண்டும். தேவையான வடிகால் வசதி செய்திட வேண்டும். வேரை சுற்றி மண் இட்டு, தொழு உரம் இட வேண்டும். திராட்சை கொடியில் அடிப்பகுதியில் மண் அணைத்து, கொடியில் போர்டோ கலவை பசைபூச வேண்டும். மிளகு கொடி வேர்பகுதியில் டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனஸ், பூஞ்சாண கொல்லி மருந்துகளை இடலாம். கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். காற்றினால் பாதிக்கும் வாழை மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து, சவுக்கு கம்புகளை முட்டு கொடுக்க வேண்டும். 75 சதவீதத்திற்கு மேல் முதிர்ந்த தார்களை அறுவடை செய்திட வேண்டும். என்றார்.