மேலும் செய்திகள்
ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
19-Sep-2025
தேனி: தேனி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தேனி வட்டார அலுவலர் மயிலம்மாள் தலைமை வகித்து, ஊர்வலத்தை துவக்கி வைத்தார். மேற்பார்வையாளர்கள் நாகலட்சுமி, மணிமேகலை முன்னிலை வகித்தனர். பழைய பஸ் ஸ்டாண்ட் கம்பம் ரோட்டில் துவங்கிய ஊர்வலம் பங்களாமேட்டில் நிறைவடைந்தது. ஊட்டச்சத்து விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்றனர்.
19-Sep-2025