உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த கோரி மனு பாதையை மீட்டு தரக்கோரி தர்ணா

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த கோரி மனு பாதையை மீட்டு தரக்கோரி தர்ணா

தேனி: ராஜதானி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு கும்பாபிேஷகம் நடத்த கோரி ஹிந்து முன்னணியினர் கலெக்டர் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர். கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. சமூக பாதுகாப்பு திட்ட மாவட்ட அலுவலர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 322 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.கம்பம் நகராட்சி 33வது வார்டு விவேகானந்தர் தெரு பார்த்திபன், ராதாலட்சுமி உள்ளிட்டோர் வழங்கிய மனுவில், விவேகானந்தர் நகர்பகுதியில் கழிவு நீர் செல்ல வழியின்றி தேங்கியுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அப்பகுதியில் முறைகேடாக அமைக்கப்பட்ட தடுப்பு சுவரை அகற்றி வடிகால் அமைத்து தர கோரினார்.ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமையில் வழங்கிய மனுவில், 'ஆண்டிபட்டி தாலுகா ராஜதானியில் உள்ள பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சிதலமைடந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள் அந்த கோயிலுக்கு குடமுழுக்கு செய்ய முயன்றனர். இதனை ஹிந்து அறநிலையத்துறையினர் தடுத்து, தாங்கள் குடமுழுக்கு செய்வதாக கூறினார். ஆனால் 6 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை நடவடிக்கை இல்லை. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.கலெக்டரிடம் முறையீடு அரசியல் கட்சியினருடன் தேர்தல் ஆலோசனைக்கூட்டம் முடித்து கலெக்டர் அலுவலகம் திரும்பிய போது மாற்றுத்திறனாளிகளிடம் மனு பெற்றார். அப்போது அவர்கள், மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு உரியபாதை வசதி, கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். டூவீலர், இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். மாவட்ட அலுவரை மாற்ற வேண்டும் என கோரிக்கைகளை வைத்தனர். கலெக்டர் கூறுகையில், 'அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். அதிகாரிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். தர்ணா: சுக்குவாடன்பட்டி இந்திராகாலனி தலைவர் இந்திரன் தலைமையில் மக்கள் மனு அளிக்க வந்தனர். அவர்கள் அனைவரும் உள்ளே செல்ல முயன்றனர். போலீசார் சிலர் மட்டும் சென்று மனு அளிக்க அறிவுறுத்தினர். அனைவரையும் உள்ளே அனுமதிக்க கோரி கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன் தர்ணாவில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்குப்பின் அவர்களில் சிலரை போலீசார் உள்ளே அனு மதித்தனர். அவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். மனுவில், எங்கள் குடியிருப்பிற்கு செல்லும் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனை அகற்றி பாதை அமைத்து தர வேண்டும். என்றிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி