மேலும் செய்திகள்
த.வெ.க., ஆர்ப்பாட்டம்..
05-Apr-2025
உத்தமபாளையம் : மத்திய அரசின் வக்ப் சட்ட திருத்த மசோதாவை கைவிடக்கோரி இஸ்லாமியர் கூட்டமைப்பு சார்பில் உத்தம பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் கலீல் அகமது தலைமை வகித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் இமாம் முகம்து இஸ்மாயில் முன்னிலை வகித்தார். சட்டத்தை கண்டித்து இமாம் அப்துல் காதர் ஜிலானி, மனித நேய மக்கள் கட்சி செயற்குழு உறுப்பினர் ரபீக் அகமது, எஸ்.டி, பி.ஐ. மாவட்ட தலைவர் அபுபக்கர் சித்திக், மனித நேய மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் பக்கீர் மைதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சட்ட திருந்தத்திற்கு எதிராக கோஷங்கள் போட்டனர். வி.சி.க., ஆர்ப்பாட்டம்
தேனி: பங்களாமேட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், வக்ப் வாரிய திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாவட்டச் செயலாளர் ரபீக்தலைமை வகித்தார். மேற்கு மாவட்டச் செயலாளர் மதன், மாவட்டத் துணைச் செயலாளர் ஆரோக்கியசாமி, ஒன்றியச் செயலாளர் ஆண்டி, நகர செலயாளர் ஜோதிமுருகன், தேனி நகரச் செயலாளர ஈஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
05-Apr-2025