உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா

காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா

தேனி: ஆண்டிபட்டி தாலுகா க.விலக்கு பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன், தலைமையில் காலி குடங்களுடன் வந்து, கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அனைவரும் மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர். போலீசார் அனைவரையும் கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கவில்லை. இதனால் கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் காலி குடங்களுடன் தர்ணாவில் ஈடுபட்டனர். பின் சிலர் மட்டும் கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்று மனு அளித்தனர். மனுவில் க.விலக்கு பகுதியில் சில மாதங்களாக குடிநீர் வினியோகம் இல்லை.கோயில்பட்டி மற்றும் திருமலாபுரம் ஊராட்சி அலுவலகம், ஒன்றிய அலுவலகங்களில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க கோரி இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை