போலீசாருக்கு ரோந்து டூவீலர்கள் வழங்கல்
தேனி : மாவட்டத்தில் 5 போலீஸ் சப்டிவிஷன்களில் குற்றச்சம்பவங்களை தடுப்பதற்காக 24 ரோந்து டூவீலர்கள் இயங்கி வருகிறது. மேலும் குற்றங்களை தடுக்கும் விதமாக16 ரோந்து டூவீலர்களை நேற்று தேனி எஸ்.பி., அலுவலகத்தில் இருந்து ரோந்து போலீசாருக்கு வழங்கப்பட்டன. இதன் துவக்க விழாவில் எஸ்.பி.,சினேஹாபிரியா கொடி அசைத்து துவக்கி வைத்தார். உடன் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்.ஐ., திவான்மைதீன், மணிகண்டன்உள்ளிட்டோர் உடனிருந்தனர்.