உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஓடையில் கொட்டும் குப்பையால் திசை மாறி செல்லும் மழைநீர்

ஓடையில் கொட்டும் குப்பையால் திசை மாறி செல்லும் மழைநீர்

தேவாரம், : தேவாரம் ஆர்.ஜி., ஸ்கூல் அருகே உள்ள ஓடை முதல் பிள்ளையாரூத்து ஓடை வரை இருபுறமும் ஆக்கிரமிப்பு, காய்கறி, குப்பை கழிவுகளை கொட்டுவதால் மழைநீர் சீராக செல்ல வழியின்றி திசை மாறி செல்கிறது.தேவாரம் பகுதியில் 1500 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் உள்ளன. ஆர்.ஜி., ஸ்கூல் அருகே உள்ள ஓடை, 7 கி.மீ., தூரம் வரை உள்ள பிள்ளையாரூத்து ஓடை வரை அமைந்துள்ளது. இந்த ஓடை 100 அடி அகலமாக இருந்தது. ஓடையின் இருபுறமும் முட்செடிகள், தனிநபர்கள் ஆக்கிரமித்து தென்னை, கப்பை, தக்காளி விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் ஓடையின் அகலம் குறுகலாகி 30 அடியாக குறைந்துள்ளது. மழை காலங்களில் மழைநீர் சீராக கண்மாய்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. தேவாரம் காய்கறி சந்தை வியாபாரிகள் சிலர் காய்கறி கழிவுகளையும், ஓடை அருகே குடி இருப்பவர்கள் குப்பையையும் கொட்டி வருகின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு முன் பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் கழிவுகள் முழுவதும் அடித்து வரப்பட்டு, சிறு பாலங்களுக்கு அடியில் சிக்கி கொண்டன. இதில் வெள்ளநீர் திசை மாறி தோட்டங்கள், குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இழுத்து வரப்பட்ட தென்னை மரங்கள் ஓடைக்குள் கிடந்ததால் கனரக வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்பட்டது. ஓடையில் இருபுறமும் வளர்ந்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், காய்கறி, குப்பைக் கழிவுகளை கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ