மேலும் செய்திகள்
சஷ்டி விரதம்: வாழை பழங்களுக்கு தட்டுப்பாடு
06-Nov-2024
'5 டவுன் பஸ்கள் புதிய வழித்தடத்தில் இயக்கம்'
12-Nov-2024
தேனி: தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மருத்துவ குணம் வாய்ந்த ராம் சீத்தா பழங்கள் விற்பனைக்கு வந்தன. இவை கிலோ ரூ.100க்கு விற்பனையானது.மாவட்டத்தில் நாட்டு சீத்தா பழ வகை மட்டும் சாகுபடி செய்யப்படுகிறது.இவற்றில் விதைகள் அதிக அளவிலும், சதைப்பற்று குறைவாகவும் காணப்படும். சீத்தா பழத்தின் மற்ற வகைகளான ராம் சீத்தா, முள் சீத்தா உள்ளிட்டவை தேனி மாவட்டத்தில் பயிரிடப்படுவது இல்லை. இந்நிலையில் தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ரோட்டோர பழக்கடைகளில் மருத்துவ குணம் வாய்ந்த 'ராம் சீத்தா' விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.அல்லிநகரம் ஆண்டிச்சியம்மாள் கூறுகையில், 'இந்த வகை சீத்தா பழங்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல், சிறுமலை பகுதிகளில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இவை நவம்பரில் மட்டும் கிடைக்கிறது. இவற்றில் விதைகள் குறைவாகவும், சதைப்பற்று அதிகமாகவும் இருக்கும். இதனால் பொது மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். கிலோ ரூ.100க்கு விற்பனையாகிறது., என்றார்.
06-Nov-2024
12-Nov-2024