மேலும் செய்திகள்
கோவில் தெப்ப உற்சவம்
15-Mar-2025
தேனி : அல்லிநகரம் பெருமாள் கோயிலில் ராமநவமி உற்சவ விழாவிற்கான கொடியேற்றம் நேற்று நடந்தது. ராமநவமி விழா ஏப்.,6ல் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பெருமாள் கோயில்களில் உற்சவ விழா கொண்டாட்டங்கள் துவங்கி உள்ளன. அல்லிநகரம் கிராம கமிட்டிக்கு பாத்தியப்பட்ட வரதராஜ பெருமாள் கோயிலில் நேற்று கொடியேற்று விழா நடந்தது. விழாவில் பாசுரங்கள் பாடப்பட்டன. விழா ஏற்பாடுகளை அல்லிநகரம் கிராம கமிட்டியினர், சடகோப ராமனுஜ கோஷ்டியர்கள், ராமநவமி உற்சவ விழா குழுவினர் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
15-Mar-2025