உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரங்கநாதபுரம் - -சிலமலை ரோடு சேதம்

ரங்கநாதபுரம் - -சிலமலை ரோடு சேதம்

போடி அக். 18-: போடி ரங்கநாதபுரம் -- சிலமலை செல்லும் ரோடு முழுவதும் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக உள்ளததால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். போடியில் இருந்து தேவாரம் செல்லும் ரோடு போக்குவரத்திற்கு முக்கிய பாதையாக உள்ளது. தினமும் ஏராளமான வாகனங்கள் இந்த வழியாக சென்று வருகின்றன. கனரக வாகனங்கள் செல்லும் போது போக்குவரத்திற்கு பெரும் இடையூறாக இருந்தது. இதனை தவிர்க்க 15 ஆண்டுகளுக்கு முன்பு போடி ரங்கநாதபுரத்தில் இருந்து சிலமலை வரை 4 கி.மீ., தூரம் 50 அடி அகலத்தில் ரோடு, சிறு பாலங்கள் அமைக்கப்பட்டன. ரோட்டின் இருபுறமும் உள்ள மணல்களை அள்ளி கடத்தி வருவதால் ரோட்டின் பக்கவாட்டு முழுவதும் அரிப்பு ஏற்பட்டு உள்ளன. ரோடு முழுவதும் சேதம் அடைந்து வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு குண்டும், குழியுமாக மாறி உள்ளன. மழை காலங்களில் மழை நீருடன் கழிவுநீர் பள்ளங்களில் தேங்கி கிடக்கிறது. இரவில் வரும் வாகன ஓட்டிகள் ரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளம் தெரியாமல் விபத்திற்குள்ளாகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைகின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன் சேதம் அடைந்த ரோடு, பள்ளங்களை சீரமைக்கவும், தேவையான இடங்களில் தடுப்புச்சுவர் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை