உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  ஜி.பி.எஸ்., கேமராவுடன் விரைவு குற்றத் தடுப்பு வாகனங்கள் துவக்கம்

 ஜி.பி.எஸ்., கேமராவுடன் விரைவு குற்றத் தடுப்பு வாகனங்கள் துவக்கம்

தேனி: மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கும் வகையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுக்கம் நோக்கத்தில் எஸ்.பி., சினேகாபிரியா தேனி எஸ்.பி., அலுவலக வளாகத்தில் எட்டு அதிவிரைவு குழு வாகனங்களை துவக்கி வைத்தார். இந்த வாகனங்களில் ஜி.பி.எஸ்., சிஸ்டம், கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதன்படி முதல் க்யூ.ஆர்.டி., வாகனம் தேனி, அல்லிநகரம், தென்கரை பகுதிகளையும், 2வது வாகனம், பழனிசெட்டிபட்டி, வீரபாண்டி, சின்னமனுார் பகுதிகளையும்,3 வது வாகனம், உத்தமபாளையம், ஓடைப்பட்டி, ராயப்பன்பட்டி பகுதிகளிலும், 4 வது வாகனம் கம்பம் வடக்கு, கம்பம் தெற்கு, கூடலுார் வடக்கு, தெற்கு பகுதிகளையும், 5வது வாகனம் போடி நகரம், போடி தாலுகா, குரங்கனி, தேவாரம், தேவாரம், கோம்பை உள்ளிட்ட பகுதிகளிலும், 6 வது வாகனம் ஆண்டிபட்டி, ராஜதானி, க.விலக்கு, வைகை அணை பகுதிகளிலும், 7 வது வாகனம் கண்டமனுார், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருஷநாடு பகுதிகளிலும், 8 வது வாகனம் பெரியகுளம், தேவதானப்பட்டி, ஜெயமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் குற்றங்களை தடுக்கும் நோக்கத்தில் விரைவாக உடனடி நடவடிக்கைக்காக துவங்கி வைக்கப்பட்டு உள்ளது. இந்த வாகனங்கள் அதிக மக்கள் கூடும் இடங்களில் நிறுத்தி கண்காணிக்கப்படும். ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு எஸ்.ஐ., 2 போலீஸ்காரர்கள் சுழற்சி முறையில் பணி புரிவார்கள். ஆயுதப்படை டி.எஸ்.பி., ராஜன், இன்ஸ்பெக்டர்கள் ஜெயச்சந்திரன், காளீஸ்வரன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்.ஐ.,க்கள் தீவான்மைதீன், மணிகண்டன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி