உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இடமலைகுடி ஊராட்சியில் முடங்கிய ரேஷன் வினியோகம்; மலைவாழ் மக்கள் பாதிப்பு

இடமலைகுடி ஊராட்சியில் முடங்கிய ரேஷன் வினியோகம்; மலைவாழ் மக்கள் பாதிப்பு

மூணாறு, : இடமலைகுடி ஊராட்சியில் ரேஷன் பொருட்கள் வினியோகம் முடங்கியதால் மலைவாழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.மூணாறு அருகே இடமலைகுடியில் அடர்ந்த வனத்தினுள் 26குடிகளில் (கிராமம்) மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர்.அப்பகுதி மலைவாழ் மக்களுக்கு தனி ஊராட்சியாக உருவாக்கப்பட்டு இடமலைகுடி ஊராட்சி என 2010 முதல் செயல்பட்டு வருகிறது.அப்பகுதிக்கு தேவையான ரேஷன் பொருட்கள் கிரிஜன் கூட்டுறவு சங்கம் மூலம் வழங்கப்படுறது. மூணாறில் இருந்து ராஜமலை பெட்டிமுடி வரை ரேஷன் பொருட்கள் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு, அங்கு குடோனில் பாதுகாக்கப்படும்.அங்கிருந்து இடமலைகுடி ஊராட்சியில் சொசைட்டிகுடி, பரப்பியாறுகுடி ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன்கடைகளுக்கு குறிப்பிட்ட தூரம் வரை அதிக உந்து சக்தி கொண்ட ஜீப்புகளிலும், பின்னர்தலை சுமையாகவும் பொருட்கள் கொண்டு செல்லப்படும்.ராஜமலை பெட்டிமுடியில் இருந்து ஜீப்புகளில் பொருட்களை கொண்டு செல்ல டெண்டர் விடப்பட்டது. டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் பொருட்களை கொண்டு செல்ல தயாராகாததால், இடமலைகுடி ஊராட்சியில் இரண்டு வாரங்களாக ரேஷன் பொருட்கள் வினியோகம் முடங்கியது.அதனால் மலைவாழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தவிர ராஜமலை பெட்டிமுடியில் ரேஷன் அரிசி மூடைகள் பாதுகாப்பு இன்றி திறந்த வெளியில் வைக்கப்பட்டுள்ளதால், அவை சேதமடைய வாய்ப்புகள்உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை