உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரேஷன் கடை பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்

ரேஷன் கடை பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்

தேனி : தேனி அல்லிநகரம் கூட்டுறவு சங்க அலுவலக வளாகத்தில் ரேஷன் கடை பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மகாலிங்கம் தலைமை வகித்தார்.மாவட்ட நிர்வாகிகள் பன்னீர்செல்வம், அழகர்சாமி, ஜெயபிரகாஷ், அய்யனார், மாநில பொருளாளர் பொன்அமைதி, மாநில செயலாளர் பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தீபாவளியை முன்னிட்டு 15ம் தேதிக்குள் குடிமை பொருட்கள் எடை குறைவின்றி நகர்வு செய்ய வேண்டும்.பணியாளர் விரோத போக்கை கடை பிடிக்கும் தேனி கூட்டுறவு மண்டல நிர்வாக இயக்குநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்வது, உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ