உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  புதிதாக கட்டி முடித்தும் வாடகை கட்டடத்தில் இயங்கும் ரேஷன் கடை

 புதிதாக கட்டி முடித்தும் வாடகை கட்டடத்தில் இயங்கும் ரேஷன் கடை

போடி: போடி அருகே ரங்கநாதபுரத்தில் ரூ.13 லட்சம் மதிப்பில் புதிதாக ரேஷன் கடை கட்டி முடித்தும் 2 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராமல் ரேஷன்கடை வாடகை கட்டடத்தில் இயங்குவதால் அரசுக்கு ரூ.பல ஆயிரம் வருமான இழப்பு ஏற்பட்டு வருகிறது. மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ரங்கநாதபுரம், அம்பேத்கர் தெரு, அமராவதி நகர், மனோரமா நகர், கிருஷ்ணா நகர் பகுதியில் சேர்ந்த மக்கள் ரேஷன் பொருட்கள் பெற ரங்கநாதபுரம் ரேஷன் கடைக்கு வரவேண்டும். இந்த கடை பல ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. போதிய இடவசதி இன்றி ரேஷன் பொருட்களை பாதுகாப்பாக வைக்க முடியாமல் பணியாளர்களும், பொருட்கள் பெற முடியாமல் மக்களும் சிரமம் அடைந்து வருகின்றனர். சிரமங்களை தவிர்க்கும் வகையில் ரங்கநாதபுரத்தில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.13 லட்சம் மதிப்பில் புதிதாக ரேஷன் கடை கட்டப்பட்டு உள்ளது. கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டிய நிலையில் உள்ளது. வாடகை கட்டடத்தில் ரேஷன் கடை இயங்குவதால் அரசுக்கு ரூ.பல ஆயிரம் வருமான இழப்பு ஏற்பட்டு வருகிறது. அரசுக்கு வருவாய் இழப்பை தடுக்கவும், புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடையை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி