உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விழுப்புரத்திற்கு நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு

விழுப்புரத்திற்கு நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு

தேனி: தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் பெஞ்சல் புயல், கனமழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்திற்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. கலெக்டர் ஷஜீவனா கொடி அசைத்து லாரியை அனுப்பி வைத்தார். நிகழ்வில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதாஹனிப், கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், பேரிடர் மேலாண்மை தாசில்தார் பாலசண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரிசி, சீனி, சேமியா உள்ளிட்ட 16 வகையான பொருட்கள் கொண்ட ஆயிரம் பைகள், துண்டு, குடிநீர் பாட்டில்கள், போர்வை அனுப்பப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !