உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மழையின்மையால் உழவு செய்த நிலங்களில் விதைப்புக்கு தயக்கம்

மழையின்மையால் உழவு செய்த நிலங்களில் விதைப்புக்கு தயக்கம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் உழவு செய்த மானாவாரி நிலங்களில் மழை இன்மையால் விவசாயிகள் விதைப்புக்கு தயக்கம் காட்டுகின்றனர். ஆண்டிபட்டி பகுதியில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மானாவாரி விவசாயம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி, ஆவணி மாதங்களில் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் சிறுதானியம், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் விதைப்பு செய்வர். கடந்த சில வாரங்களில் பெய்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் பலரும் நிலத்தை உழவு செய்து பாத்தி அமைத்து விதைப்புக்கு தயார் நிலையில் வைத்துள்ளனர். ஆனால் விதைப்புக்கு ஏற்ற மழை இன்னும் பெய்யவில்லை. ஏற்கனவே இருந்த ஈரப்பதத்தில் துவரை விதைப்பு செய்த நிலங்களில் தற்போது செடிகள் முளைத்துள்ளது. ஆனால் செடிகள் வளர்ச்சிக்கு ஏற்ற மழை இல்லை. விவசாயிகள் கூறியதாவது, 'தென்மேற்கு பருவமழையை பயன்படுத்தி விதைப்பு செய்தால் முளைத்த பயிர்கள் வடகிழக்கு பருவ மலையில் வளர்ந்து பலன் கொடுக்கும். தற்போது ஆண்டிபட்டி பகுதியில் தென்மேற்கு பருவமழை இன்னும் போதுமான அளவு பெய்யவில்லை. இதனால் விதைப்பு பணிகள் தாமதம் ஆகிறது,' இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை