உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  பொது இடங்களில் வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டுகள் அகற்றம்

 பொது இடங்களில் வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டுகள் அகற்றம்

மூணாறு: மூணாறு நகரில் விதிமீறி பொது இடங்களில் வைக்கப்பட்ட வேட்பாளர்களின் பிளக்ஸ் போர்டுகளை அதிகாரிகள் அகற்றினர். இடுக்கி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் முதல் கட்டமாக டிச.9ல் நடக்கிறது. அதற்கான பிரசாரத்திற்கு தேர்தல் கமிஷன் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போர்டுகள் வைக்கக்கூடாது என நிபந்தனை விதித்தது. அதனை அதிகாரிகள் அகற்ற நேரிட்டால், அதற்கான செலவை வேட்பாளர்களிடம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதனை மீறி மூணாறு ஊராட்சியில் 18ம் வார்டில் போட்டியிடும் காங்கிரஸ், இடது சாரி, பா.ஜ., அ.தி.மு.க. ஆகிய கூட்டணிகளைச் சேர்ந்த வேட்பாளர்களின் பிளக்ஸ் போர்டுகள் நகரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் வைக்கப்பட்டன. அவற்றை அகற்றுமாறு மூணாறு ஊராட்சி செயலர் உதயகுமார் அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோருக்கு உத்தரவிட்டார். அவர்கள் அகற்றாததால் நகரில் வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டுகளை வருவாய் துறையினர் அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ