தேசிய நெடுஞ்சாலையில் கட்டட இடிபாடுகள் அகற்றம்
பெரியகுளம்; தேனி மாவட்டம் வழியாக திண்டுக்கல்- குமுளி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. மாவட்ட எல்லையான பரசுராமபுரத்தில் துவங்கி கீழக்கூடலூர் வரை 30 க்கும் அதிகமான கிராமங்கள் வழியாக பைபாஸ் ரோடு செல்கிறது. பல இடங்களில் கிராம சாலைகள் பைபாஸ் உடன் இணைகின்றன. தேவதானப்பட்டி முதல் தேனி மதுராபுரி 18 கி.மீ., தூரத்திற்கு இடைப்பட்ட ரோட்டோரங்களில் கட்டட இடிபாடுகள் கொட்டப்பட்டிருந்தது. இதனால் இரவில் வடுகபட்டி தாமரைக்குளம் பிரிவில் கொட்டப்பட்ட கட்டட இடிபாடுகளினால் டூவீலரில் செல்பவர்கள் மோதி காயமடைந்தனர். இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தேசிய நெடுஞ்சாலை துறை நிர்வாகம் கட்டட இடிபாடுகள் அகற்றியது. இதனால் அந்த இடம் பளீச் என ஆனது. --