உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சீரமைக்கப்பட்ட ரோடு ஒன்றரை மாதத்தில் சேதம்

சீரமைக்கப்பட்ட ரோடு ஒன்றரை மாதத்தில் சேதம்

மூணாறு: மூணாறில் சீரமைக்கப்பட்ட ரோடு ஒன்றரை மாதத்தில் சேதமடைந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.மூணாறில் காலனி செல்லும் ரோட்டில் இக்காநகர், செட்டில்மென்ட் காலனி இடையே ரோடு சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. மாவட்ட ஊராட்சி சார்பில் ரூ.20 லட்சம் செலவில் ஒன்றரை மாதத்திற்கு முன்பு ரோடு சீரமைக்கப்பட்டது. ரோட்டில் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் சிமென்ட் கற்கள் பதித்தும், மீதமுள்ள பகுதிகளில் கான்கிரீட் மூலமும் சீரமைப்பு பணிகள் நடந்தன.இந்நிலையில் சீரமைப்பு பணிகள் நடந்து ஒன்றரை மாதத்தில் சிமென்ட் கற்கள் பெயர்ந்து விட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பெயர்ந்த சிமென்ட் கற்களில் டூவீலர் உள்பட சில வாகனங்கள் சிக்கி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. முறையாக பணிகள் செய்யாமல் நடந்த முறைகேடு காரணமாக ரோடு சேதமடைந்ததாக கூறும் பொதுமக்கள் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளிக்கவும், போராட்டங்கள் நடத்தவும் தயாராகி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை