உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குடியரசு தின விழா கொண்டாட்டம்... போடி

குடியரசு தின விழா கொண்டாட்டம்... போடி

போடி அன்னை இந்திரா நினைவு ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சிவனேஸ்வர மணிச்செல்வன் கொடி ஏற்றினார். ஆசிரியர் முத்து கார்த்திகா, கண்காணிப்பாளர் பிரேமா, குழந்தைகள் நல அலுவலர் மனோகரன் வரவேற்றனர். மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் நடந்தன.போடி திருமலாபுரம் நாடார் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் பிருவிராஜன் கொடி ஏற்றினார். உதவி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். ஆசிரியர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். கலை நிகழ்ச்சிகள் நடந்தன.உப்புக்கோட்டை பச்சையப்பா நர்சரி அண்ட் பிரைமரி பள்ளியில் தாளாளர் லட்சுமிவாசன் கொடி ஏற்றினார். தலைமை ஆசிரியர் ரஞ்சித் குமார் முன்னிலை வகித்தார். வேத பாட கணித ஆசிரியர் வினோபாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.போடி ஜி.டி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தவமணி கணேசன் அறக்கட்டளை அறங்காவலர் காளியம்மாள் கொடி ஏற்றினார். முதல்வர் மகேஸ்வரி தலைமை வகித்தார். நிர்வாகிகள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இனிப்புகள் வழங்கப்பட்டன.உப்புக்கோட்டை பச்சையப்பா உயர்நிலைப் பள்ளியில் செயலாளர் லட்சுமிவாசன் கொடி ஏற்றினார. தலைமையாசிரியர் புவனேஸ்வரி, துவக்கப் பள்ளி தலைமையாசிரியர் தங்கம்மாள், நிர்வாக குழு உறுப்பினர் பச்சையப்ப ராஜா முன்னிலை வகித்தனர். மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் நடந்தன.போடி நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் பார்கவி கொடி ஏற்றினார். நகராட்சித் தலைவர் ராஜராஜேஸ்வரி, பொறியாளர் குணசேகர், சுகாதார அலுவலர் மணிகண்டன், கவுன்சிலர்கள், அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.காங்., சார்பில் போடி நகரத் தலைவர் முசாக் மந்திரி கொடி ஏற்றினார். மாவட்ட துணை தலைவர் சன்னாசி, வட்டார தலைவர் ஜம்பு சுதாகர், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி கிருஷ்ணவேணி, நகரப் பொதுச் செயலாளர் அரசகுமார் உட்பட நகர நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.போடி ஏல விவசாய சங்க கல்லுாரியில் என்.சி.சி., மாணவர்கள் அணிவகுப்பு மரியாதையுடன் பேராசிரியர் முருகேசன் கொடி ஏற்றினார். கல்லுாரிச் செயலாளர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராமநாதன், முதல்வர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். நிர்வாகக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.போடி அரசு பொறியியல் கல்லுாரியில் முதல்வர் வசந்த நாயகி கொடி ஏற்றினார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் தமிழ்மாறன், இளைஞர் நெஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் குபேரராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் நடந்தன.போடி வட்டார ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தில் தலைவர் காந்தி கொடி ஏற்றினார். செயலாளர் செல்வராஜ், பொருளாளர் தேவகவுடா முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் அங்கையன், இணை செயலாளர் ரபி அகமது உட்பட பலர் பங்கேற்றனர்.போடி ஜமீன்தாரணி காமலம்மாள் நினைவு மேல்நிலைப் பள்ளியில் செயலாளர் இனாயத் உசேன்கான் கொடி ஏற்றினார். தலைவர் செந்தில் தியாகராஜன் தலைமை வகித்தார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, சேதுராம், காளிமுத்து, சண்முக வரதராஜ், முருகன், சுப்ரமணியம் ராமராஜ், தலைமை ஆசிரியர் ராமசுப்பிரமணி, பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.போடி பங்கஜம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் வாசு கொடி ஏற்றினார். தலைமை ஆசிரியை வாசுகி முன்னிலை வகித்தார். ஆசிரியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி தீயணைப்பு அலுவலகத்தில் நிலைய அலுவலர் முத்துக்குமரன் கொடி ஏற்றினார். தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர். வைகை அணை நீர்வளத்துறை அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் முருகேசன் கொடி ஏற்றினார். உதவி பொறியாளர்கள் பரதன், பிரசாத், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லுாரியில் பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் காசுமாயன் கொடி ஏற்றினார். கல்லுாரி பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியில், தாளாளர் ஹென்றி அருளானந்தம் முன்னிலையில் நிர்வாகி தமயந்தி கொடி ஏற்றினார். பள்ளி செயலாளர் மாத்யூஜோயல், முதல்வர் உமாமகேஸ்வரி, ஆசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.ஆண்டிபட்டி முத்துகிருஷ்ணாபுரம் ஜெய் கிரிஷ் வித்தியாஷ்ரம் சி.பி.எஸ்.இ., பள்ளியில் முதல்வர் ராஜேஸ்வரி கொடி ஏற்றினார். ஆசிரியர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.ஆண்டிபட்டி எஸ்.கே.ஏ., மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் கொடி ஏற்றினார். எஸ்.கே.ஏ.,கல்வி குழுமத்தின் தலைவர் வச்சிரவேல் முன்னிலை வகித்தார். எஸ்.கே.ஏ., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் சாந்தி, எஸ்.கே.ஏ., கல்வியியல் கல்லுாரியில் துணை முதல்வர் தங்கவேல் கொடி ஏற்றினர். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சக்கம்பட்டி நன்மை தருவார் ஐயப்ப சுவாமி கோயிலில் தமிழ் பண்பாடு கலாச்சார அகாடமி தலைவர் முத்துவன்னியன் கொடி ஏற்றினார். ஆண்டிபட்டி காமராஜர் சிலை முன் வட்டார காங்., தலைவர் ரவி கொடி ஏற்றினார். நகர் தலைவர் சுப்புராஜ், நகர் செயலாளர் ராஜாராம், நகர் துணைத் தலைவர்கள் ரத்தினவேல், வேல்மணி உட்பட பலர் கலந்து கொண்டனர். திருமலாபுரம் ஊராட்சி அலுவலகத்தில் துணை பி.டி.ஓ., பரமராஜ் முன்னிலையில் ஊராட்சி செயலாளர் ராஜேஷ் கொடி ஏற்றினார். டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர் பிச்சைமணி கொடி ஏற்றினார்.திம்மரசநாயக்கனூர் ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சிகளின் பி.டி.ஓ., சரவணன் கொடி ஏற்றினார். ஊராட்சி செயலாளர் புஷ்பம், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.ஆண்டிபட்டி பெண்கள் ஐ.டி.ஐ.,யில் முதல்வர் சரவணன் கொடி ஏற்றினார். பயிற்சி அலுவலர் ரமேஷ், பயிற்றுநர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். கூடலூர்: முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்க அலுவலக வளாகத்தில் தலைவர் ஜெயராஜ் கொடி ஏற்றினார். முன்னாள் தலைவர்கள் முருகேசன், அண்ணாதுரை, சோலைராஜ், கொடியரசு முன்னிலை வகித்தனர். செயலாளர் அன்பு, பொருளாளர் ராமர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இனிப்பு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை