உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சுருளி அருவியில் தர்ப்பண மண்டபம் கட்ட கோரிக்கை

சுருளி அருவியில் தர்ப்பண மண்டபம் கட்ட கோரிக்கை

கம்பம் : சுருளி அருவியில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கான மண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தென் மாவட்டங்களில் சுற்றுலா தலமாகவும், ஆன்மிக தலமாகவும் சுருளி அருவி விளங்குகிறது.மறைந்த முன்னோர்களுக்கு அமாவாசை நாட்களில் அருவியில் குளித்து ஆற்றங்கரையில் அமர்ந்து தர்ப்பணம் செய்வார்கள். குறிப்பாக தை, ஆடி, மகாளய அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் திரள்வார்கள். திறந்த வெளியில் அமர்ந்து தர்ப்பணம் கொடுக்கும் போது, மழை பெய்தால் மிகவும் சிரமமாகும். எனவே சுருளி அருவியில் ஆற்றப் பாலம் அருகில் தர்ப்பண மண்டபம் ஒன்றை கட்ட அரசு உத்தரவிட வேண்டும். ஊரக வளர்ச்சி துறை இப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை