மேலும் செய்திகள்
திட்டக்குடியில் உடற்பயிற்சி கூடம் தேவை
12-Jun-2025
பாழாகும் காரைக்குடி அம்மா பூங்கா
20-Jun-2025
தேனி : ''தேனி மீறு சமுத்திர கண்மாய் கரையில் நடை பயிற்சி பாதை, உடற்பயிற்சி கூடம் அமைப்பதற்கான பணிகளை விரைந்து துவங்க வேண்டும்.'' என, பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.தேனி நகர் பகுதியில் தாலுகா அலுவலகம், உழவர் சந்தை அருகே சுமார் 120 ஏக்கர் பரப்பில் மீறு சமுத்திர கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாய் கரையில் 1.8 கி.மீ., துாரத்திற்கு நடைபயிற்சி பாதை, படகு குழாம், உடற்பயிற்சி கூடம், குளத்தின் மையத்தில் பறவைகள் அமர்வதற்கு தீவு போன்ற அமைப்பு உள்ளிட்டவை அமைக்க நீர்வளத்துறைக்கு அரசு ரூ.7.4 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. ஆனால், தற்போது வரை குளம் முழுவதும் ஆகாயதாமரை ஆக்கிரமித்தும், கரைகளில் குப்பை நிரம்பியும் காணப்படுகிறது. குளத்தை சுத்தம் செய்து, மேம்பாட்டு, வளர்ச்சி பணிகளை பொதுப் பணித்துறையினர் துவங்க வேண்டும். விரைந்து செயல்படுத்தப் பட்டால் நகர் பகுதியில் உள்ள பொது மக்கள் பயனடைவர்.
12-Jun-2025
20-Jun-2025