உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சின்ன வாய்க்கால் கரையில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை

சின்ன வாய்க்கால் கரையில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை

சின்னமனூர்: சின்னமனூர் சின்ன வாய்க்கால் கரையில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற நீர்வளத்துறை நடவடிக்கை எடுக்க நீரினை பயன்படுத்துவோர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் ராஜா நீர்வளத்துறைக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது :சின்னமனூரில் சின்ன வாய்க்கால்,பெரிய வாய்க்கால் மூலம் 1800 ஏக்கர் நன்செய் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. சின்னவாய்க்கால் நகராட்சி மெயின் ரோட்டிற்கு அருகில் உள்ளது. இந்த வாய்க்காலில் முல்லை பெரியாற்று தண்ணீர், கருங்கட்டான் குளம், தாமரைக் குளம், பிடிஆர் வாய்க்கால் உபரி நீர், மழை நீர் என அனைத்தும் சின்ன வாய்க்கால் வழியாக உடையகுளம், செங்குளம் சென்று முல்லைப் பெரியாற்றில் கலக்கிறது.சின்ன வாய்க்கால் ஆக்கிரமிப்பில் சிக்கி கரைகள் பலமிழந்துள்ளது. இதனால் கரைகள் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புக்களால் நடைபாதை மறைக்கப்பட்டுள்ளது. பயிர்களை அறுவடை செய்து கொண்டு வர பாதை இல்லை. மேலும் புன்செய் நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதாக கூறி கரைகளை சேதப்படுத்தி வருகின்றனர். நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர், வருவாய்த் துறையினர் அளவீடு செய்து தந்த பின் ஆக்கிரமிப்புக்கள் அகற்றுவதாக கூறுகிறார். காலதாமதம் இன்றி சின்ன வாய்க்கால் கரை ஆக்கிரமிப்புக்களை அகற்றிட வேண்டும் என கோரியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி