உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வடத்தான்குளம் வரத்து வாய்க்கால் அமைக்க தீர்மானம்

வடத்தான்குளம் வரத்து வாய்க்கால் அமைக்க தீர்மானம்

போடி: சிலமலை வடத்தான் குளத்திற்கு வரத்து வாய்க்கால் அமைப்பதற்கான விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் ராசிங்காபுரத்தில் நடந்தது. இதில் வடத்தான்குளம் பாசன விவசாயிகள் சங்க புதிய தலைவராக ஜெயபிரகாஷ், துணைத் தலைவராக குமரேசன், செயலாளராக கண்ணன், துணைச் செயலாளராக பொன்ராம், பொருளாளராக செல்வராஜ், கவுரவ தலைவராக ரவி, ஒருங்கிணைப்பாளராக பனை முருகன், செயற்குழு உறுப்பினர்களாக செல்வராஜ், சுஜித், ஆழ்வார், பாண்டியன், முருகன், சிவக்குமார், வெங்கடேசன், ஜோதி மணிகண்டன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் அதிகாரிகள், விவசாயிகளின் ஒத்துழைப்போடு வடத்தான் குளத்திற்கு வரத்து வாய்க்கால் அமைக்கவும், இக்குளத்திற்கு 18ம் கால்வாய் நீரைக் கொண்டு வருவதற்கான பணிகள் மேற்கொள்வது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை