மேலும் செய்திகள்
மாணவியரிடம் அத்துமீறிய ஆசிரியர் சிறையில் அடைப்பு
29-Nov-2024
ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஜெயோசிலின், சில நாட்களாக, மாணவியர் வளையல், பொட்டு, பூவுடன் பள்ளிக்கு வருவதற்கு, கட்டுப்பாடுகள் விதித்துள்ளார். இதுகுறித்து பெற்றோர் சிலர், நேற்று மதியம் பள்ளி நிர்வாகத்திடம் இதுகுறித்து விளக்கம் கேட்டதால் பிரச்னை ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஆண்டிபட்டி போலீசார், மாணவிகளிடம் விசாரித்தனர். போலீசார், பெற்றோரை சமாதானம் செய்து அனுப்பினர். பள்ளி நிர்வாகத்தினர் கூறும்போது, 'மாணவியர் சிலர், வழக்கத்திற்கு மாறான காதணிகள், கையில் காப்பு அணிந்து வருகின்றனர். மாணவியர் நலனுக்காக பள்ளியில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை தவறாக புரிந்து கொண்டுள்ளனர்' என்றார்.
29-Nov-2024