உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வருவாய்த்துறை காத்திருப்பு போராட்டம்  ஒத்திவைப்பு 

வருவாய்த்துறை காத்திருப்பு போராட்டம்  ஒத்திவைப்பு 

தேனி: மாவட்ட வருவாய்த்துறையில் சீனியாரிட்டி பட்டியல் வெளியிட கோரி இருதினங்களாக வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நடத்திய காத்திருப்பு பேராட்டம் கலெக்டர் பேச்சுவார்த்தைக்குப்பின் ஒத்திவைக்கப்பட்டது. மாவட்ட வருவாய்த்துறையில் பதவி உயர்விற்கான சீனியாரிட்டி பட்டியல் விரைவாக வெளியிட வேண்டும், பட்டியல் தொடர்பாக நீதிமன்ற வழக்கில் எதிர்வாதம் தாக்கல் செய்யாத மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை நிர்வாகத்தை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் செப்.,1 மாலை முதல் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு பேராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 9:30 மணி அளவில் சங்க நிர்வாகிகளுடன் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். தற்காலிக முதுநிலைபட்டியல் வெளியீடு உள்ளிட்டவை பற்றி விரைவில் அறிவிப்பதாக தெரிவித்ததால் போராட்டத்தை ஒத்தி வைத்ததாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி