உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேசிய நெடுஞ்சாலையில் குவிந்த மணலால் விபத்து அபாயம்

தேசிய நெடுஞ்சாலையில் குவிந்த மணலால் விபத்து அபாயம்

தேனி : மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை குவிந்துள்ள மணல்களால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளன.ஆண்டிப்பட்டியில் இருந்து போடி மெட்டு வரை தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த ரோடு தேனி நகர்பகுதி வழியாக செல்கிறது. இந்த ரோட்டில் இருபுறமும் மணல் குவியல்கள் பல இடங்களில் அதிகரித்துள்ளன. தற்போது பெய்த தொடர் மழையால் பல இடங்களில் நடுரோடு வரை மணல் குவிந்து காணப்படுகிறது. இதனால் டூவீலர்களில் செல்வோர் மணல்களில் வாரிவிழும் நிலை உள்ளது. குறிப்பாக தேனி நகர்பகுதியில் நேருசிலை முதல் கலெக்டர் அலுவலம் வரையிலான பகுதியில் ரோட்டோர மணல் குவியல்கள் அதிகரித்துள்ளன. தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் இதனை கண்டு கொள்ளாமல் உள்ளனர். மழை பொழியும் போதெல்லாம் ரோட்டின் பாதியளவிற்கு மணல் மேவுவது வாடிக்கையாக உள்ளது. தினமும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். ஆனால் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அவற்றை முறையாக அகற்றாமல் அலட்சியம் செய்கின்றனர். பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி