உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உடைந்த சிறு பாலத்தில் விபத்து அபாயம்

உடைந்த சிறு பாலத்தில் விபத்து அபாயம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம், அனுப்பப்பட்டி ஊராட்சி கூத்தமேடு கிராமத்தில் குடியிருப்பு அருகே உடைந்த பாலம் விபத்து ஏற்படுத்துவதாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் மழைநீர் வடிந்து செல்வதற்காக சிறு பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக கடந்த சில மாதங்களுக்கு முன் கனரக வாகனம் சென்றதால் பாலம் சேதம் அடைந்தது. சேதம் அடைந்த பாலத்தை சரி செய்யாமல் கற்களால் மூடிவிட்டனர். பாலத்தின் மையத்தில் ஏற்பட்டுள்ள பள்ளம் வாகனங்களுக்கும், நடந்து செல்பவர்களுக்கும் விபத்து ஏற்படுத்துவதாக உள்ளது. சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை