உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குடிநீர் வழங்க கோரி ரோடு மறியல்

குடிநீர் வழங்க கோரி ரோடு மறியல்

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி பேரூராட்சி 2 வது வார்டு பகுதி புஷ்பராணி நகர். இங்கு 15 நாட்களாக குடிநீர் வினியோகிக்கவில்லை என அந்தப்பகுதி மக்கள் காட்ரோடு -- கொடைக்கானல் ரோட்டில் ரோடு மறியலில் ஈடுபட்டனர். தேவதானப்பட்டி எஸ்.ஐ., வேல்மணிகண்டன் பேச்சு வார்த்தை நடத்தி, சீராக குடிநீர் விநியோகம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால் ரோடு மறியல் கைவிடப்பட்டது. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. வாகனங்கள் ஜி.கல்லுப்பட்டி வழியாக மாற்று பாதையில் சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி