உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரூ.6 லட்சம் மோசடி: இருவர் மீது வழக்கு

ரூ.6 லட்சம் மோசடி: இருவர் மீது வழக்கு

தேனி: போடி டி.வி.கே.கே., நகர் ஈஸ்வரி. இவருக்கு மாந்தோப்பு உள்ளது. இந்த தோப்பை, போடி குலாளர்பாளையம் ரவி 56, வெண்ணிமலை தெரு தீபக்குமார் ஆகியோருடன் இணைந்து கிரையம் வாங்க ஆவணங்கள் தயார் செய்தனர். இதற்காக தீபக்குமாரின் ஆசைவார்த்தைகளை நம்பி ரவி முன்பணம் ரூ.6 லட்சம் வழங்கினார். குறிப்பிட்ட நாளில் பத்திரப்பதிவு செய்யாமல், அதே மாந்தோப்பை வேறு நபருக்கு மோசடியாக ஈஸ்வரி, தீபக்குமார் இணைந்து விற்பனை செய்துவிட்டனர். பணத்தை திருப்பிக்கேட்ட ரவியிடம், ஒரு மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவதாக எழுதி கொடுத்து, மீண்டும் ஏமாற்றி உள்ளனர். ரவி புகாரில் போடி டவுன் போலீசார், ஈஸ்வரி, தீபக்குமார் மீது மோசடி வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி