நிதி வழங்காமல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்த நிர்பந்தம் ஊரக வளர்ச்சித்துறையினர் புலம்பல்
தேனி: உரிய நிதி வழங்காமலும், சரியான திட்டமிடல் இல்லாமல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்த நிர்பந்திப்பதாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் புலம்பி வருகின்றனர். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் ஜெகதீசன், செயலாளர் தாமோதரன் கூறியதாவது: ஊரக வளர்ச்சித்துறையினருக்கு பல்வேறு திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என நெருக்கடி வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் ஊராட்சிகள், ஒன்றிய பகுதிகளில் சரியான திட்டமிடல் இன்றி அவசர கதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடக்கிறது. சில ஊராட்சிகளில் முகாம் நடந்த போதிய நிதி இல்லை. அந்த பகுதிகளில் நிதி வழங்காமல் முகாம்கள் நடத்த அலுவலர்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர். இதுபற்றி உயர் அதிகாரிகளிடம் முறையீடு செய்தும் நடவடிக்கை இல்லை. முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு அவகாசம் வழங்கி உள்ளது. ஆனால், மனுக்களுக்கு அவசரமாக தீர்வு காண நிர்பந்திப்பதை அதிகாரிகள் கைவிட வேண்டும், என்றனர்.