உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சபரிமலை உற்ஸவம்: முன் ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆலோசனை சபரிமலை உற்ஸவ முன் ஏற்பாடுகள்: கலெக்டர் ஆலோசனை

சபரிமலை உற்ஸவம்: முன் ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆலோசனை சபரிமலை உற்ஸவ முன் ஏற்பாடுகள்: கலெக்டர் ஆலோசனை

மூணாறு : சபரிமலை உற்ஸவ காலம் நெருங்குவதால், அதற்கான முன் ஏற்பாடுகள் குறித்து இடுக்கி கலெக்டர் தினேசன் செருவாட் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கேரளாவில் பிரசித்து பெற்ற சபரிமலை உற்ஸவ காலம் நெருங்குவதால், இடுக்கி மாவட்டத்தில் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் தொடர்பான முன் ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் தினேசன் செருவாட் அனைத்துத் துறை உயர் அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தினார். தேசிய நெடுஞ்சாலையில் நிரந்தரமாக விபத்து நிகழும் வளந்தஞானம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துணை ஆணையம், பொதுப்பணித்துறை ரோடு பிரிவு, மோட்டார் வாகனத்துறை, தீயணைப்புத் துறை, போலீஸ் ஆகிய துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தர விடப்பட்டது. அதே போல் பக்தர்களுக்கு ஓய்வு மையங்கள், வாகனங்கள் நிறுத்துவதற்கு இடவசதி ஆகியவற்றை கண்டறி யுமாறு மோட்டார் வாகன துறை, உள்ளாட்சித்துறை இணை இயக்குனர், போலீஸ் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டது. பக்தர்களுக்கு குடிநீர், மருத்துவம், கழிவறை, பார்க்கிங் ஆகிய வசதிகள் ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறைகளைச் சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. வண்டிப் பெரியாறு, குமுளி, ஏலப்பாறை, பெருவந்தானம், பீர்மேடு, கருணாபுரம், காஞ்சாறு ஆகிய ஊராட்சிகளில் பார்க்கிங் வசதி செய்யவும், அது போன்ற இடங்கள் இல்லாத பகுதிகளில் புதிய இடங்களை தேர்வு செய்யுமாறு பரிந் துரைக்கப்பட்டது. ரோடுகளில் பராமரிப்புப் பணிகள் உடனடியாக பூர்த்தி செய்து தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கோடுகளை துல்லியமாக குறிப்பிடவும் அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டது. குமுளி, வண்டிப் பெரியாறு, ஏலப்பாறை, கட்டப்பனை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கூடுதல் போலீசாரை நியமிக்கவும், நெரிசல் அதிகரிக்கும் போது ஒரு வழி பாதையாக முறைபடுத்தவும் இடுக்கி எஸ்.பி.க்கு உத்தரவிடப்பட்டது. புல்மேடு வழியிலான காட்டு பாதையை சீரமைக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தப்பட்டனர். கழுதைக்குழி முதல் சன்னிதானம் வரை தெரு விளக்குகள் அமைக்கவும், சத்திரத்தில் உள்ள கழிவறைகளை ஏலம் விட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் தேவசம் போர்டுக்கு பரிந்துரைக்கப் பட்டது. வருவாய், மாவட்ட வழங்கல் துறை, உணவு பாதுகாப்புத்துறை ஆகியோர் இணைந்து உணவுகளின் அளவு, தரம், விலை ஆகியவற்றை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கவும், உணவுகளின் விலை பட்டியல் ஆறு மொழிகளில் வைக்கவும் உத்தரவிடப்பட் டது. பக்தர்களின் வருகைக்கு ஏற்ப குமுளியில் இருந்து பம்பைக்கு கூடுதல் கேரள அரசு பஸ்கள் இயக்குவது உள்பட பல்வேறு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை