உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கோடை வெயிலால் காட்டன் ரக சேலைகள் விற்பனை அமோகம்

கோடை வெயிலால் காட்டன் ரக சேலைகள் விற்பனை அமோகம்

ஆண்டிபட்டி: கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம், சக்கம்பட்டி பகுதியில் உற்பத்தியாகும் காட்டன் ரக சேலைகள் விற்பனையும்,உற்பத்தியும் அதிகரித்துள்ளது.இப்பகுதியில் 1000க்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் காட்டன் ரக சேலைகள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் உற்பத்தியாகும் காட்டன் ரக சேலைகள் தமிழகம் முழுவதும் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. பல வண்ணங்கள் பல டிசைன்களில் உற்பத்தியாகும் காட்டன் ரக சேலைகளுக்கு தீபாவளி, தைப்பொங்கல் சீசனாக இருந்தாலும் கோடை காலத்தில் நகர்புறங்களில் பயன்பாடு அதிகரித்து விற்பனையும் அமோகமாகும்.காட்டன் ரக சேலைகள் உற்பத்தியாளர்கள் கூறியதாவது: டி.சுப்புலாபுரம், சக்கம்பட்டி பகுதியில் தற்போது 60, 80ம் நம்பர் நூல்களில் காட்டன் ரக சேலைகள் உற்பத்தி ஆகிறது. பல வண்ணங்களில் செல்ப் கட்டம், புட்டா, மெர்சி ரைஸ்டு ரக சேலைகள், கட்டம், புட்டா, கோர்வை, பிளைன் ரகங்களில் உள்ள சேலைகள் தற்போது உற்பத்தியாகிறது. இச்சேலை களுக்கு மார்க்கெட்டில் அதிக தேவையும் உள்ளன. உற்பத்தியாகும் சேலைகள் உடனுக்குடன் வியாபாரிகள் மூலம் விற்பனை ஆகிறது. ஆன்லைன் மூலமும் பலர் விற்பனையை தொடர்கின்றனர். கோடை வெயிலின் தாக்கத்தை தவிர்க்க பலரும் ஆர்வமுடன் காட்டன் ரக சேலைகளை வாங்குகின்றனர். தினமும் இப்பகுதியில் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் சேலைகள் வரை உற்பத்தி ஆகிறது.வியாபாரிகள் கூறியதாவது: தற்போது இப்பகுதியில் உற்பத்தியாகும் சேலைகள் ரகத்திற்கு தக்கபடி ரூ.600 முதல் ரூ.1500 வரையிலான விலையில் உள்ளன.நூல், மூலப்பொருட்கள் விலையில் ஏற்ற தாழ்வு உற்பத்தியாளர்கள் வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்.கடந்த சில மாதங்களாக நிலவும் சீரான நூல் விலை வியாபாரிகள் உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்துவதாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை