உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போனஸ் வழங்க கோரி துாய்மை பணியாளர்கள் கமிஷனரிடம் மனு

போனஸ் வழங்க கோரி துாய்மை பணியாளர்கள் கமிஷனரிடம் மனு

பெரியகுளம்: பெரியகுளத்தில் தனியார் ஒப்பந்த நிறுவனம் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ், வருங்கால வைப்பு நிதி வழங்காததால் நடவடிக்கை எடுக்க கோரி தூய்மை பணியாளர்கள் நகராட்சி கமிஷனர் தமிகா சுல்தானவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.பெரியகுளம் நகராட்சியில் 50க்கும் அதிகமான தூய்மை பணியாளர்கள் ராமன் அண்ட் கோ நிறுவனத்தில்ஒப்பந்த முறையில் பணி புரிகின்றனர். இவர்களுக்கு நிறுவனம் இன்னமும் தீபாவளி போனஸ் வழங்காமலும், வருங்கால வைப்பு நிதி, காப்பீடு கணக்குகள் பராமரிக்காமல் நிறுவனம் இழுத்தடித்து வருகிறது. இதனை கண்டித்து தூய்மை பணியாளர்கள் நவ.1ல் வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கமிஷனர் (பொறுப்பு) ஏகராஜ், நவ.4ல் ராமன் அண்ட் கோ மேலாளர், தூய்மை பணியாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் ஒரு வாரத்திற்குள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என நிறுவனம் தெரிவித்தது. தற்போது ஒரு வாரம் முடிந்தும் கோரிக்கை மீது நடவடிக்கை இல்லை.நேற்று இந்திய குடியரசு தொழிலாளர் சங்க மாநில துணை செயலாளர் ஜெகனாதன் தலைமையில் தூய்மை பணியாளர்கள் கமிஷனர் தமிகாசுல்தானாவிடம், கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும்.நடவடிக்கை இல்லையெனில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ