உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி நகராட்சி முன் துாய்மை பணியாளர்கள் தர்ணா

தேனி நகராட்சி முன் துாய்மை பணியாளர்கள் தர்ணா

தேனி, ஜூன் 19-தேனி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இவை 5 டிவிஷன்களாக பிரிக்கப்பட்டு சுகாதாரப்பணிகள் தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து பணிகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனத்தில் சுமார் 110க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.இவர்களில் 2வது டிவிஷனில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள் நேற்று காலை நகராட்சி அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.அவர்கள் கூறியதாவது, ' கடந்த மே மாதம் பணி செய்தற்கு இதுவரை ஊதியம் வழங்கவில்லை. பி.எப்., இ.எஸ்.ஐ., பிடிப்பதாக கூறுகின்றனர். அதற்காக எந்த அடையாள அட்டை வழங்கியதில்லை. ஒப்பந்தகாலம் முடிவடைய உள்ளதால் ஊதியம் தராமல் இழுத்தடிக்கின்றனர். இதனால் வீட்டு வாடகை, குழந்தைகள் பள்ளி, மருத்துவ செலவு கவனிக்க முடியாமல் தவிக்கிறோம்,' என்றனர்.சுகாதார அலுவலர் ஜெயராமன் பேச்சு நடத்திய பின் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை