மேலும் செய்திகள்
உயர்கல்வி படிப்பதை ஊக்குவிக்க கல்லுாரி களப்பயணம்
14-Oct-2025
தேனி: மாவட்டத்தில் உயர்கல்வி கற்போர் எண்ணிக்கையை அதிகரிக்க பிளஸ் 2 படிக்கும் 2470 மாணவர்களை கல்லுாரிகளுக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பில் 5121 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்கள் அனைவரும் கல்லுாரி செல்வதை உறுதி செய்ய பள்ளிக் கல்வித்துறை சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக இதில் 2470 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களை கல்லுாரிகளுக்கு அழைத்துச் சென்று, அங்கு வகுப்புகள், ஆய்வகங்கள், கூட்டரங்குகள், பயிற்சிகள் உள்ளிட்டவை பற்றி நேரடி விளக்கம் அளித்து சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட உள்ளன. இதற்காக மாவட்டத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லுாரிகள், பொறியியல், மருத்துவம், தோட்டக்கலை கல்லுாரிகளுக்கும், தனியார் கல்லுாரிகளுக்கும் அழைத்து செல்லப்பட உள்ளனர். இவர்களில் சில மாணவர்களை அருகில் உள்ள மாவட்டங் களில் உள்ள அரசு, தனியார் கல்லுாரிகளுக்கும் அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளது என, கல்வித் துறையினர் தெரிவித் தனர்.
14-Oct-2025