உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போடி பஸ் ஸ்டாண்டில் இருக்கைகள் மாயம்

போடி பஸ் ஸ்டாண்டில் இருக்கைகள் மாயம்

போடி: போடி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ளவும், பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் உட்கார இருக்கைகளுடன் 12 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. நடமாட்டம் அதிகம் இருக்கும் பஸ் ஸ்டாண்டில் நிழற்குடை பகுதியில் இருந்த இருக்கைகளை சமூக விரோதிகள் ஒவ்வொன்றாக திருடி சென்று விட்டனர். நிழற்குடை பகுதியை போதை ஆசாமிகள் , சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் வெயில், மழைக்கு பயணிகள சிரமம் அடைந்து வருகின்றனர். பயணிகள் பயன் பெறும் வகையில் பாதுகாப்பான முறையில் இருக்கைகள் அமைத்திட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !