ஊராட்சி தலைவர் ராஜினாமா விதி மீறிய செயலர் பணி மாற்றம்
மூணாறு: மூணாறு ஊராட்சியில் தலைவர் ராஜினாமா செய்த விவகாரத்தில் செயலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.மூணாறு ஊராட்சியில் காங்கிரஸ் சார்பில் 3ம் வார்டு உறுப்பினர் தீபா 2024 பிப்.15ல் தலைவரானார்.அவர் மார்ச் 29ல் தனது பொறுப்பை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதத்தில் ஏற்பட்ட குளறுபடியில் தலையிட்ட தேர்தல் கமிஷன் தீபா தலைவராக தொடரலாம் என உத்தரவிட்டதால் அவர் ஏப்.24ல் மீண்டும் தலைவராக பொறுப்பேற்ற நிலையில் ஏப்.28ல் மீண்டும் ராஜினாமா செய்தார்.இந்நிலையில் தீபா மார்ச் 29ல் ராஜினாமா கடிதத்தை செயலர் உதயகுமாரிடம் வழங்கினார். அது தொடர்பான செயல்களில் செயலர் விதிமுறைகள் மீறியதாக ஊராட்சியைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்ளாட்சிதுறை தலைமை இயக்குனர், தேர்தல் கமிஷன் உள்பட உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அது தொடர்பாக நடந்த விசாரணையில் செயலர் உதயகுமார் விதிமுறைகள் மீறியதாக தெரியவந்தது. அதனால் அவரை கோழிக்கோடு மாவட்டம் துனேரி ஊராட்சி செயலராக பணியிட மாற்றம் செய்து உள்ளாட்சிதுறை தலைமை இயக்குனர் நேற்று உத்தரவிட்டார்.