உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அனுமதியின்றி மண் அள்ளிய இயந்திரம், டிராக்டர் பறிமுதல்

அனுமதியின்றி மண் அள்ளிய இயந்திரம், டிராக்டர் பறிமுதல்

ஆண்டிபட்டி: டி.சுப்புலாபுரம் அருகே ஆண்டிபட்டி வனச் சரக அலுவலகத்திற்கு பின்புறம் மண் திருட்டு நடப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அப்பகுதியில் ஆண்டிபட்டி எஸ்.ஐ., மணிகண்டன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மண் அள்ளும் இயந்திரம் மூலம் மண்ணை அள்ளி டிராக்டரில் கொட்டிக் கொண்டிருந்தனர். மண் கொண்டு செல்வதற்கு முறையான ஆவணங்கள் இல்லை. இதனைத் தொடர்ந்து டி.சுப்புலாபுரத்தைச் சேர்ந்த மண் அள்ளும் இயந்திர வாகனத்தின் டிரைவர் அஜித்குமார், டிராக்டர் டிரைவர் ரோகேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து, வாகனங்களை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி