உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்

தேனி : தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் 'எம்படட், இன்டர்நெட் ஆப் திங்ஸ்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி செயலாளர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். இணைச்செயலாளர் சுப்ரமணி முன்னிலை வகித்தார். கல்லுாரி எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் துறை பேராசிரியர் வெனிஸ்குமார் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் மதளைசுந்தரம், கருத்தரங்கின் முக்கியத்துவம் பற்றி பேசினார். ஒசூர் இன்னோவேட் இன்ஜினியரிங் புராடெக்ட் நிறுவனர் ராஜேஷ் பேசுகையில்,' எம்படட், இன்டர்நெட் ஆப் திங்ஸ் தொழில்நுட்பத்தின் தொழில்துறை பயன்கள், சாப்ட்வேர்கள், வேலைவாய்ப்புகள்,' பற்றி பேசினார். விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத்தலைவர் தர்மராஜன், துணைத்தலைவர் ஜீவகன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்லுாரி துணை முதல்வர்கள் மாதவன், சத்யா, பேராசிரியர்கள் கருத்தரங்கை ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ