கருத்தரங்கம்
போடி:போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்த்துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி தலைவர் ராமநாதன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஞானவேல், செயலாளர் புருஷோத்தமன், முதல்வர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் அலமேலு வரவேற்றார். பாரதி தமிழ் இலக்கியப் பேரவை தலைவர் பாரதன் பங்கேற்று பாரதியார் பெருமைகள் குறித்து விளக்கினார். கட்டுரை, கவிதை, பேச்சு போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பேராசிரியர்கள் சுரேஷ் குமார், மீனா, பால்பாண்டி ஆகியோர் செய்திருந்தனர்.