மேலும் செய்திகள்
விபத்தில் சிக்கியவருக்கு உதவி செய்தவருக்கு அடி
09-Oct-2025
பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை இடுக்கடிலாட் தெரு பிரவீன்குமார் 28. இவர் டூவீலரில் உறவினரை அழைத்துக் கொண்டு அரசு பஸ் டெப்போ முன்பு டூவீலரை நிறுத்தி விட்டு, உறவினரை பஸ்சில் அனுப்பி வைத்தார். திரும்பி பார்த்தபோது 5 நிமிடம் இடைவெளியில் டூவீலர் திருடு போனது. பிரவீன் குமார் புகாரில் வடகரை போலீசார் விசாரிக்கின்றனர். தொடரும் திருட்டு: பெரியகுளம் தென்கரை, வடகரை பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் 30க்கும் அதிகமான டூவீலர்கள் திருடு போயுள்ளது. இதில் வடகரை பகுதியில் திருட்டு அதிகம். ஒருவரை கூட போலீசார் கைது செய்யவில்லை. டி.எஸ்.பி., நல்லு தனிக்கவனம் செலுத்தி டூவீலர் திருட்டை தடுக்க வேண்டும்.
09-Oct-2025